விடுபட்ட அனைத்து கிராமத்திற்கும் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கப்படும் மானாமதுரை திமுக வேட்பாளர் தமிழரசி உறுதி

இளையான்குடி, ஏப்.5: விடுபட்ட கிராமங்களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என, மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி வாக்குறுதி அளித்தார். மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி இளையான்குடி பகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், ‘‘கடந்த கால திமுக ஆட்சியில் இளையான்குடி பகுதியில் பல திட்டங்களை கொண்டு வந்தோம். நீதிமன்றம், சார்நிலை கருவூலம், சார்நிலை பதிவக அலுவலகம், காவிரி மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மாணவ, மாணவிகள் விடுதி, கிராமச்சாலைகள், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ, அந்த வேலை மட்டும்தான் நடைபெற்றது. மணல் கொள்ளை, குடிமராமத்து பெயரில் திருட்டு மண் கடத்தல், காவிரி கூட்டு குடிநீர் விநியோகத்தை தடைசெய்தது, தாயமங்கலம் கோபுர வேலையை இழுத்தடிப்பது, தாலிக்கு தங்கம் வழங்காமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக காலம் கடத்தியது. இளையான்குடி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புது பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், மிளகாய் எண்ெணய் தயாரிப்பு நிலையம் மற்றும் அனைத்து விடுபட்ட கிராமங்களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் வழங்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories:

>