காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி உறுதி

காரைக்குடி, ஏப்.5:  காரைக்குடி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி சங்கராபுரம் ஊராட்சி, காரைக்குடி நகர் பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரித்து தனது பிரச்சாரத்தை முத்துமாரியம்மன் கோவில் அருகே நிறைவு செய்தார். பிரச்சார நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். வேட்பாளர் மாங்குடி பேசுகையில், ‘‘காரைக்குடி, தேவகோட்டை தாலுகா பகுதிகளை என் இரண்டு கண்கள் போல் காத்து மக்கள் பணியாற்றுவேன். காரைக்குடி பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். தேவகோட்டை பகுதியில் பகுதிநேர எம்எல்ஏ அலுவலகம் துவங்கப்படும்.  

மக்கள் குறைகளை போக்க செல்போன் ஆப் வசதி துவங்கப்படும். விவசாயிகளின் நலன்காக்க விவசாய போர்வெல் அமைத்து தரப்படும். காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பாதாளசாக்கடை திட்டம் எம்எல்ஏ ஆனவுடன் விரைந்து முடித்து சாலை வசதிகள் செய்துதரப்படும். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அனைத்து பகுதிகளும் இணைக்கப்படும். காரைக்குடியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, அரசு நர்சிங் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி துவங்கப்படும். விவசாய விளைபொருட்களை பாதுகாப்பாக வைக்க அரசு சார்பில் குடோன் அமைக்கப்படும். தேவகோட்டை நகர் பகுதியில் சாலைகள், பாதாளசாக்கடை திட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி  கொண்டு வரப்படும். கிராமப்புற மக்களின் தேவைக்கு ஏற்ப அரசு டவுன் பஸ் இயக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

>