பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் முருகேசன் மக்களுடன் மாபெரும் ஊர்வலம்

பரமக்குடி, ஏப்.5: பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் முருகேசன் பரமக்குடி நகர், போகலூர், நயினார்கோவில், பரமக்குடி, கமுதி கிழக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து நேற்று இறுதிகட்ட பிரச்சாரத்தை பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 23, 24, 25 ஆகிய வார்டுகளில் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், பாண்டியன் ஆகியோரது தலைமையில் மேற்கொண்டார். பின்னர் மாலை 4 மணிக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளிலிருந்து ஆண்களும் பெண்களும் திரளாக திரண்டு இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திசை வீரன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், மாநில திட்டக்குழு துணை தலைவர் திவாகர், நகர் செயலாளர்கள் சேது கருணாநிதி, ஜீவரத்தினம், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சந்திரசேகர், பரமக்குடி போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், போகலூர் ஒன்றிய பொருளாளர் குணசேகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கந்தசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், எஸ்.எம்.டி. அருளானந்து, தங்கராஜ், நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்தி, அண்ணாமலை, மகளிர் அணி செல்வி, நகர துணை செயலாளர் மும்மூர்த்தி, நகர மாணவரணி மகேந்திரன், தொமுச அரசுமணி, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் வளவன், மதிமுக குணா, காங்கிரஸ் நகர தலைவர் அப்துல் அசிஸ், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜா, பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>