×

மதுரை விமான நிலைய இயக்குனர் மாற்றம்

அவனியாபுரம், ஏப்.5: மதுரை விமான நிலைய இயக்குனர், கோவைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வருபவர் செந்தில் வளவன். இவர் கோவை விமான நிலைய இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மேற்கு மண்டலத்தில் மும்பையில் பணியாற்றி வரும் பாபுராஜ் மதுரை விமான நிலைய இயக்குனர் பணியிடத்திற்கு மாற்றப்படுகிறார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு. தற்பொழுது பணியாற்றி வரும் இயக்குனர் செந்தில் வளவன், ஜூலை மாதம் வரை இப்பணியினை தொடர்வார். அதன் பின்னரே கோவைக்கு சென்று பதவி ஏற்க உள்ளார்.

Tags : Madurai Airport ,
× RELATED சட்டவிரோத பண வரவை தடுக்க மதுரை விமான...