அமைச்சராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டப்பணிகளை நத்தம் தொகுதிக்கு செய்துள்ளேன் இறுதிக்கட்ட பிரசாரத்தில் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

நத்தம், ஏப். 5: நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இரட்டை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது கட்சியினர், கிராமத்தினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். இறுதி நாளான நேற்று காலையில் கோபால்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் பேசி மாலையில் நத்தம் பஸ்நிலைய பகுதியில் நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது. நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் அமைச்சராக இருந்தபோதும் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன். நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்புடையவனாக உள்ளேன். என்னை பொறுத்தவரை தொகுதி வளர்ச்சிதான் முக்கியம். அதிமுக சார்பில் இந்த தொகுதியில் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது மீண்டும் 5வது முறையாக போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், ஒன்றியச் செயலாளர்கள் ராமராஜ், சுப்பிரமணியன், மணிகண்டன், சின்னு, ஜெயசீலன், நகரசெயலாளர் சிவலிங்கம், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் சேக்தாவூது, மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் அசாருதீன், நகர அவைத்தலைவர் சேக்ஒலி, நத்தம் ஒன்றியக்குழு துணைதலைவர் முத்தையா, மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாகவுண்டர், பார்வதி உள்ளிட்ட நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்கள், நகர நிர்வாகிகள், சார்பு அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>