வாக்குச்சாவடியில் பணியாற்றும் 7,973 அலுவலர்கள் தபால் மூலம் வாக்களிப்பு

ஈரோடு, ஏப். 5:   ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் 7,973 அலுவலர்கள் தபால் மூலம் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 2,741 வாக்குச்சாவடியில் 13,160 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி கூட்டத்தில் அலுவலர்களுக்கு தபால் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் 13,160 அலுவலர்களில் 7,973பேர் இதுவரை தங்களது வாக்கினை தபால் மூலம் பதிவு செய்து ஓட்டு பெட்டியில் போட்டனர். மீதமுள்ளவர்கள் வாக்கு எண்ணும் நாளான மே 2ம் தேதிக்குள் அவர்களது வாக்கினை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>