குள்ளம்பாளையத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் கே.ஏ.செங்கோட்டையன்

கோபி, ஏப். 5:   கோபி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.நாளை (6ம் தேதி) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்து. இதனால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோபி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சராக உள்ள கே.ஏ.செங்கோட்டையன் 8வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கோபி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாள் என்பதால், இறுதி கட்ட பிரசாரத்தை தனது சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் தொடங்கினார். குள்ளம்பாளையத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிக்க சென்ற கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் ஆராத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். குள்ளம்பாளையத்தில் குறுக்கு வீதிகளில் உள்ள ஒன்றிரண்டு வீடுகளிலும் வாக்கு சேகரிக்க செல்ல சிறிது தொலைவு செல்ல வேண்டும் என்ற நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

Related Stories:

>