×

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

ஈரோடு,  ஏப். 5:  ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் களத்தில் போட்டியிடும்  128 வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் ஓய்ந்தது.
   ஈரோடு  மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி,  அந்தியூர், கோபி, பவானிசாகர் (தனி) என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8  தொகுதிகளிலும் திமுக, அதிமுக, அமமுக, மநீம, பகுஜன் சமாஜ்,  சுயேட்சைகள் என மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 128  வேட்பாளர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை பெற்று, அந்தந்த  தொகுதியில் கடந்த 3 வாரங்களாக சுட்டெரிக்கும் வெயிலிலும் அனல் பறக்கும்  பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள்  பிரசாரம் மேற்கொள்ள 4ம் தேதி (நேற்று) இரவு 7 மணியே கடைசி என  அறிவித்திருந்தது. இதன்படி, அனைத்து வேட்பாளர்களும் நேற்று இறுதிகட்ட  பிரசாரத்தில் ஈடுபட்டு, மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டிருந்தனர்.  இதில், சில வேட்பாளர்கள் பிரசாரம் முடியும் இறுதி  நேரம் வரை வாக்கு சேகரித்து சரியாக 7 மணிக்குள் தங்களது பிரசாரத்தை  நிறைவு செய்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். வேட்பாளர்களின் பிரசாரம்  ஓய்ந்ததால், நாளை (6ம் தேதி) நடக்கும் தேர்தல் வாக்குப்பதிவை எதிர்நோக்கி  வேட்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Tags : 8 ,Erode district ,
× RELATED சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!!