×

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி தீவிர வாக்கு சேகரிப்பு

கரூர், ஏப். 5: கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக சிவகாமசுந்தரி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்து இரண்டு வாரங்களாக தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு வீடு வீடாகவும், திறந்த வேனில் சென்றும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரிக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து, தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று காலை 7மணியளவில் சுக்காலியூர் செக்போஸ்ட், காந்திகிராமம், புலியூர் கடைவீதி, வீரராக்கியம், மாயனு£ர் கடைவீதி, கிருஷ்ணராயபுரம் கடைவீதி, உடையாப்பட்டி கடைவீதி, சேங்கல் கடைவீதி, கடவூர் உள்மாகாணம், பாலவிடுதி, காணியாளம்பட்டி, ஜெகதாபி, ஜல்லிப்பட்டி, குள்ளம்பட்டி, விஜயபுரம், கந்தசாரப்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மாலை 5மணி வரை கடைவீதி பகுதிகளில் திறந்த வேனில் சென்று உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது, கிருஷ்ணராயபுரம் தொகுதியை வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்ற தேவையான அனைத்து பணிகளையும் நான் சிறப்பாக மேற்கொள்வேன். எனவே, அனைத்து திட்டங்களும் இந்த தொகுதி மக்களுக்கு தடையின்றி கிடைத்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி வாக்குகள் சேகரித்தார்.பிரசார நிகழ்வின் போது, அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளருடன் சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : Krishnarayapuram ,DMK ,Sivakamasundari ,
× RELATED அதிகாரிகள் அதிரடி நில மேலாண்மை சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க ஆலோசனை