தேர்தல் அலுவலர் தகவல் புதுக்கோட்டை கிராமம் தூய மங்கள அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

அரியலூர்,ஏப்.5: திருமானூர் அடுத்துள்ள புதுக்ேகாட்டை கிராமத்தில் தூயமங்கள அனனை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தூய மங்கள அன்னை ஆலயத்தின் 86ம் ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் காலை 8 மணியளவில் பக்தர்கள் தூய மங்கள அன்னை உருவம் தாங்கிய கொடியை வாணவேடிக்கை, இன்னிசையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர், ஆலய வளாகத்தில், பங்குதந்தை ரெஜிஸ் தலைமையில் குடந்தை பங்குதந்தை சாம்சன் கொடியை புனித படுத்தினார். தொடர்ந்து, பக்தர்கள் ஆலய வளாகத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறவும், கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர், ஜெபங்களுடன், வாணவேடிக்கையுடன், அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, ஆலயத்தில் பங்குதந்தை ரெஜிஸ் தலைமையில், குடந்தை பங்குதந்தை சாம்சன் அடிகளாரால் எல்லாம் நன்றாய் இருக்கிறதா என்ற மறையுரையில் திருப்பலி நடைபெற்றது.

மேலும், இந்த பெருவிழாவில், 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு மாவட்ட பங்கு தந்தையர்களால் திருப்பலி நடைபெறுகிறது.விழாவில், 9 ம் தேதி இரவு தூய மங்கள மாதா தேர்பவனியும், 10ம் தேதி இரவு அன்னையின் அலங்கார ஆடம்பர தேர்பவனியும் நடைபெறுகிறது. 11ம் தேதி காலை 11 மணிக்கு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை கொடியிறக்கம் நடைபெறுகிறது.

Related Stories: