×

கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கூட்டு திருப்பலி

பெரம்பலூர்,ஏப்.5: இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், உயிர்ப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 17ம்தேதி தொடங்கியது. 40 நாட்கள் அனுசரிக்கப்பட்ட தவக்காலத்தில், புனித வாரத்தின் மிக முக்கிய நாளான 2ம்தேதி இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்ததை நினைவுகூறும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மரித்த இயேசு கிறிஸ்து 3ம் நாள் உயிர்த்து எழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகைக்கான கொண்டாட்டம், 3ம்தேதி இரவு முதல் தொடங்கியது. இரவு 11 மணிக்கு தொடங்கிய ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில், புத்தம் புதிய ஒளியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு பிறகு, சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது.

அதேபோல் நேற்று காலை 8.15 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை சிறப்புத் திருப்பலி கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதன்படி பெரம்பலூர் புனித பனியமய மாதா தேவாலயத்தில், பெரம்பலூர் மறை வட்ட முதன்மை குருராஜ மாணிக்கம் தலைமையில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. இதே போல் பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, நூத்தப்பூர், திருவாளந்துறை, திருமாந்துறை, வடக்கலூர், பெருமத்தூர், பாடாலூர், எறையூர் ஆகிய ஊர்களில் கத்தோலிக்க தேவாலயங்களில் புனித வெள்ளி சடங்குகள் திருப்பலியுடன் அந்தந்த பங்கு குருக்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்டன. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் புனித தீர்த்தம் மந்திரித்து வழங்கப்பட்டது.

Tags : Easter ,Christian ,
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்