கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வாக்குச்சாவடி ஆயத்த பணிகள் மும்முரம் பொன்னமராவதி அருகே செம்பூதி, கண்டெடுத்தான்பட்டியில் மீன்பிடித்திருவிழா திரளானோர் திரண்டனர்

பொன்னமராவதி,ஏப்.5: பொன்னமராவதி அருகே செம்பூதி, கண்டெடுத்தான்பட்டி ஆகிய இடங்களில் மீன்பிடித்திருவிழா நடந்தது.பொன்னமராவதி பகுதியில் இந்த ஆண்டு போதிய மழை இல்லை. கடந்த மாதம் பெய்த மழையில் ஒரு சில கண்மாயில் குறைந்த அளவில் தண்ணீர் கிடந்தது. இப்பகுதியில் நிலவும் கடும் வெப்பத்தால் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் கண்மாய்களில் உள்ள மீன்களை குத்தகைக்கு விடாமல் ஊர்பொதுமக்கள் ஒன்று கூடி மீன்பிடித்திருவிழா நடத்துவது வழக்கம்.

இதன் ஒரு கட்டமாக செம்பூதிக்கண்மாய் மற்றும் கண்டெடுத்தான்பட்டி புளியங்கண்மாய் ஆகிய கண்மாய்கள் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. இதில் வலை,தூரி, கச்சா, ஊத்தா போன்றவைகள் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி சுவாமி வழிபாடு செய்து மீன்பிடித்தனர். இதில் கச்சா, அயிரை, குறவை, செலுத்தி, விரால் போன்ற மீன்கள் பிடிபட்டது. போதிய தண்ணீர் பெருகாததால் குறைவான மீன்களே கிடைத்ததாக மீன் பிடித்தவர்கள் தெரிவித்தனர்.கண்மாயில் தண்ணீர் நிரம்பி, அதிக மீன் பெருகினால் நன்றாக மழை வரும் என்பது இவர்களின் நம்பிக்கை.

Related Stories:

>