புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துராஜா தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை, ஏப். 5: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆலோசனைப்படி, தேர்தல் பிரசார நிகழ்வில் புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்த ஜீப்பில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது நான் வெற்றி பெற்றவுடன் புதுக்கோட்டையின் குரலாக ஒலிப்பேன். மக்களுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன். மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகளை நேரில் கண்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவேன். அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுப்பேன். நேரம் தவறாமல் பணியாற்றுவேன். மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று தெரிவித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதில், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>