பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு வாக்கு சேகரிப்பு

பாபநாசம், மார்ச். 5: பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு, கட்சியினர் தீவிர வாக்கு சேகரித்தனர்.திமுக கூட்டணியின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லாவை ஆதரித்து திமுக பாபநாசம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தாமரைச்செல்வன், அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் துளசி அய்யா, மனித நேய மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர் பாதுஷா உள்ளிட்ட திமுக, கூட்டணி கட்சியினர் அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அய்யம்பேட்டை-கணபதி அக்ரஹாரத்தை இணைக்கின்ற பழுதடைந்த குடமுருட்டி பாலம் புதிதாக கட்டப்படும். அய்யம்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். நாணல்கள் மண்டியுள்ள குடமுருட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் தூர்வாரப்படும். சூலமங்கலம் வாய்க்கால், துளசேந்திரம் வடிகால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரப்படும். மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்காத அளவு வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

Related Stories:

>