×

தேர்தல் அலுவலர் தகவல் தஞ்சை பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு கொரோனா தொற்று பரவல் தடுப்பு கடைபிடிக்கப்பட்டது

தஞ்சை, ஏப்.5: தஞ்சை இயேசு உயிர்ப்பு தினமான நேற்று ஈஸ்டர் திருநாளையொட்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.பாவிகளுக்காக தன்னை சிலுவையில் அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து மரணமடைவதற்கு முன் பரலோக தந்தையிடம் 40 நாட்கள் நோன்பிருந்து ஜெபித்தார். அப்போது அவர் பாடுப்பட்டு சிலுவையில் உயிரை விட்டார். இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து விரதம் இருப்பது வழக்கம். இந்நாட்களில் புலால் உணவு தவிர்த்து ஒரு நேர உணவை துறந்து விரதம் கடைபிடிப்பர்.இதில் கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து பெரிய வியாழன், புனிதவெள்ளி நாட்களில் சிறப்பு ஆராதனைகள், திருப்பலி, மன்றாட்டுகள் நடைபெறும்.

இந்நிலையில் தஞ்சை மறை மாவட்ட ஆலயமான திருஇருதய ஆலயத்தில் புனித வியாழனன்று ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் முதியோர்களின் பாதங்களை கழுவி, திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து புனித வெள்ளியன்று சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. இதில் இயேசுவின் திருவுடல் வியாகுலமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டு பங்கு மக்கள் ஜெபித்தனர்.இயேசு கிறிஸ்துவ சிலுவையை தானே சுமந்து அதில் அறையப்பட்டு மரணமடைந்ததன் மூலம் அவர் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே சுமந்து அப்பாவங்களை போக்க உயிரை விட்டார் என்பது பைபிள் வார்த்தைகள். அவர் சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வே ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஈஸ்டர் திருவழிபாடுகள் நடைபெற்றது. தஞ்சை திருஇருதய பேராலயத்தில் நடைபெற்ற இவ்வழிபாட்டுக்கு பங்கு தந்தை, உதவி பங்கு தந்தை கலந்து கொண்டனர். நள்ளிரவு திருப்பலி மற்றும் காலை திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இவ்வழிபாட்டையொட்டி கொரோனா தொற்று தடுப்புடன் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் கடைசிஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம்மேலும் கலெக்டர் கோவிந்த ராவ் கூறும்போது, கொரோனா காலக்கட்டத்தில் தேர்தல் நடைபெறுவதால் மாவட்டத்தில் உள்ள 2886 வாக்குச்சாவடிகளுக்கும் கையுறை, சானிடைசர், முகக் கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட 15 வகையான பாதுகாப்பு பொருட்கள் அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. வாக்களிக்க வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க வரலாம். அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்களிக்க வருபவர்களுக்கு கிருமிநாசினி தெளிப்பது, தெர்மல் ஸ்கேனரில் சோதனை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்வர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பி.பி.கிட். கொடுப்பார்கள் என்றார்.

Tags : Easter festival ,Tanjore ,
× RELATED கிறிஸ்தவ போதகர்களுக்கு மிரட்டல் பாஜ பிரமுகர் மீது புகார்