×

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம், ஏப்.4: மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அச்சிறுபாக்கத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் விவேகானந்தன், முதுகரை கார்த்திக், அனந்தமங்கலம் சுப்பிரமணியம், அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் முருகதாஸ், பாமக மாநில துணை பொது செயலாளர் பொன். கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபாலகண்ணன், அச்சிறுப்பாக்கம் நகர செயலாளர் இரா.முருகன், சிறப்பு செயலாளர் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரி அய்யர், மாவட்ட துணை செயலாளர் சரவணன், மகளிர் அணி நிர்வாகி பானுமதி, மாவட்ட இளைஞரணி நிர்வாகி பாரதிதாசன், வன்னியர்  சங்க நகர தலைவர் சதீஷ், செயலாளர் இரா.அரிபுத்திரன், பொருளாளர் வசந்தி, பாஜ, தமாகா, புரட்சி பாரதம்  உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அன்புமணியின் பிரசாரத்தை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி முழுவதும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக நகரில் பிரசாரம் செய்த வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு பெண்கள், இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பாக வரவேற்பளித்தனர்.

Tags : Anbumani ,AIADMK ,
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...