தேர்தலையொட்டி எம்டிசி சார்பில் 230 சிறப்பு பேருந்துகள்

சென்னை, ஏப்.4: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதலாக 230 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள், கோயம்பேடு, தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 230 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவை திருவொற்றியூர், மணலி, மாதவரம், பிராட்வே, அண்ணாசதுக்கம், தி.நகர், திருவான்மியூர், ஆவடி, பூந்தமல்லி, பெருங்களத்தூர், வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>