2 இளம்பெண்கள் திடீர் மாயம்

சாத்தூர், ஏப்.4: சாத்தூர் அருகே எ.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி(48). இவரது மகள் பாண்டிச்செல்வி(19). சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்து ஆன்லையில் படித்து வந்துள்ளார். அவர் செல்போனியில் அதிக நேரம் பேசுவதை தந்தை மாரிச்சாமி கண்டித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்து தோழியை பார்த்து வருவதாக சொல்லி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அம்மாபட்டி போலீசில் மாரிச்சாமி புகார் செய்துள்ளார். இதே போல அதேகிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி சாத்தூருக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு அவரது பெற்றோர் அம்மாபட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். இருவழக்கையும் பதிவு செய்த போலீசார். மாயமான இளம்பெண்களை தேடிவருகின்றனர்.

Related Stories:

>