விருதுநகர் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் கலெக்டருக்கு அனுப்பிய கடிதம்

விருதுநகர்,ஏப் 4: விருதுநகர் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் கலெக்டருக்கு அனுப்பிய கடிதம்: சட்டமன்ற தேர்தல் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ள சுகாதார பணியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் தங்களது வாக்கு இல்லாத வேறு வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர். வாக்குப்பதிவு நாளில் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க இயலாத சூழல் உள்ளது. தேர்தல் ஆணைய விருப்பப்படி நூறு சதவீத வாக்களிப்பது சாத்தியமில்லை. மாவட்ட தேர்தல் அலுவலர் சுகாதார ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் தபால் ஓட்டு அல்லது பணியாற்றும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க இடிசி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related Stories:

>