×

எமரால்டு அணையின் நீர்மட்டம் குறைந்தது

ஊட்டி,ஏப்.4: ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணையில் இருந்து மின் உற்பத்திக்காக நாள் தோறும் தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு அணைகள் உள்ளன. இதில், எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணை இரண்டும் பிரதமான அணைகளாக உள்ளன. இந்த அணை நீர் கொண்டு குந்தா நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து, கெத்தை, பரளி, பில்லூர்டேம் என நான்கு மின் நிலையங்களில் இந்த அணை நீரை கொண்டு இயக்கப்படுகிறது. அதே சமயம் போர்த்தியாடா, இத்தலார், எமரால்டு போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பலர் இந்த அணையின் கரையோரத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள், இந்த அணை நீரை பயன்படுத்தியே விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆண்டு தோறும், கோடையில் இந்த அணையில் தண்ணீர் வற்றிவிடும். இச்சமயத்தில் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பாதித்து வருகின்றனர். மின் உற்பத்திக்காக இந்த அணைகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அணையில் தண்ணீர் முற்றிலும் குறைந்து பெரிய புல் மைதானம் போல் காட்சியளிக்கிறது. அதன் நடுவே ஒரு சிறிய கால்வாயல் மட்டுமே ஊற்று நீர் செல்கிறது. இதனால், இந்த அணையின் கரையோர கிராமங்களான போர்த்தியாடா, இத்தலார் மற்றும் ஏமரால்டு இந்திரா நகர் போன்ற பகுதிகளில் கரையோரங்களில் விவசாயம் செய்து வருபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில், இப்பகுதிகளில் விவசாயம் செய்வதை தவிர்த்துவிட்டனர். மேலும், இரு மாதங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லாத நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஜூலை மாதத்திற்கு மேல் தான் விவசாயம் செய்ய முடியும்.

Tags : Emerald Dam ,
× RELATED நீலகிரி மாவட்டம் எமரால்டு அணை கரை பகுதியில் 2 புலிகள் உயிரிழப்பு