சின்னத்தடாகம், 24 வீரபாண்டி கிராமங்களில் திமுக வேட்பாளர் பையா (எ) ஆர். கிருஷ்ணன் பிரசாரம்

கோவை, ஏப். 4: கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக பையா (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் நேற்று பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, சின்னத்தடாகம், 24 - வீரபாண்டி ஆகிய கிராமங்களிலும், சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட, நஞ்சேகவுண்டன்புதூர், சின்னவேடம்பட்டி, வீரமாட்சியம்மன் கோவில் வீதி மற்றும் காளப்பட்டி பகுதிக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி ஆகிய பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்த பிரசார பயணத்தின்போது மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் டி.பி. சுப்பிரமணியம் (திமுக), ராமமூர்த்தி (சிபிஎம்), சி.வி.தங்கவேலு (மதிமுக) மற்றும் திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரகுபதி, எஸ்.ஜி.சுரேஷ், ஆனைகட்டி மதன், டி.கே.டி.சிவக்குமார், ஆனந்தகுமார், ஒன்றிய கழகப் பொறுப்பாளர் சி.எம்.கிருஷ்ணகுமார், பகுதி கழக பொறுப்பாளர்கள் சிவா (எ) பழனிச்சாமி, பொன்னுசாமி, வட்ட கழக பொறுப்பாளர்கள் கந்தசாமி, கதிர்வேல், சிவக்குமார், மயில்சாமி, குணசேகரன் மற்றும் சிங்கை ரவிச்சந்திரன், ஆர்.என்.லோகநாதன் மற்றும் டி.டி.எஸ் மூர்த்தி, அருள்காந்தி, திருநாவுக்கரசு, சூரியன் தம்பி, மாணிக்கம் மயில்சாமி, மாணிக்கராஜ், இளங்கோவன் மற்றும் திலீப், தனக்குமார், அரங்கசாமி, சசிரேக, பிரபாவதி, கிரி, முத்துகுமார், ரமேஷ், விஜி, ஆனந்தகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மோகன்ராஜ், நவீன் மற்றும் கொமதேக ரமேஷ் மற்றும் சிபிஎம் கேசவமணி மற்றும் மதிமுக விஸ்வராஜ் மற்றும் சிபிஐ வி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\

Related Stories:

>