கரந்தமலை அருவியில் தடுப்பணை கட்டப்படும் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் வாக்குறுதி

நத்தம், ஏப். 4: நத்தம் சட்டமன்ற தொகுதியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம்.ஆர்.விஸ்வநாதன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இத்தொகுதியில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதைதொடர்ந்து நேற்று ராவுத்தம்பட்டி, கோபால்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் உலுப்பகுடியில் பேசியதாவது: நத்தத்தின் நீராதாரம் பாதுகாக்க உலுப்பகுடி கரந்தமலை அருவியில் பெருகி வரும் நீரை மேலும் தடுப்பணைகள் கட்டி நீராதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நல்லாகுளம் தூர்வாரப்பட்டு நகர்ப்புற நீராதாரம், சுற்றுப்புற சூழல் பாதுகாக்கும் வகையில் அதன் கரையை நவீனப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்காவாக ஆக்கப்பட்டது. பஸ்நிலையம் விரிவாக்கம் போன்ற பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார். நத்தம் ஒன்றியகுழு தலைவர் கண்ணன், புன்னப்பட்டி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் முரளி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், உலுப்படி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமிபிரியா, ஊராட்சிமன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குநர்கள், தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>