திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து செம்படை பேரணி

திண்டுக்கல், ஏப். 4: திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் மாணவர், இளைஞர்கள் கலந்து கொண்ட ெசம்படை பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம் பெண்கள் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற அனைவரும் சிகப்பு சட்டை அணிந்து 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அவலங்களை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணியில் பங்கேற்றவர்கள் பாண்டிக்கு வாக்களிக்க வேண்டுமென பொதுமக்களை கேட்டுக் கொண்டனர் பேரணி பஸ்நிலையம், பெரியார் சிலை, மணிக்கூண்டு, பெரிய கடை வீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது பேரணியில் கலந்து கொண்ட வேட்பாளர் பாண்டி பொது மக்களிடம் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.

Related Stories:

>