×

ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்

சேலம், ஏப். 4: சேலத்தில் பைப்லைன் அமைக்க குழிதோண்ட வந்த ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் டவுன் கல்லாங்குத்து கணக்கர் தெருவில், குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று மாலை, அந்த பணிக்காக குழிதோண்ட வந்த ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதியினர் திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், \”கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக, இப்பகுதியில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டன. அப்போது, வீடுகளுக்கு செல்லும் சுமார் 15க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இதனால், குடியிருப்புகளுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.  அப்போது வந்த அதிகாரிகள், உடைக்கப்பட்ட பைப் லைன்களை சொந்த செலவில் சீரமைத்து தருவதாக தெரிவித்தனர். ஆனால் அதன்பின்னர் யாரும் வரவில்லை. இதனால், ஒவ்வொரு குடும்பத்தினரும் ₹5 ஆயிரம் வரை செலவு செய்து, பைப் லைனை சீரமைத்தோம். தற்போது மீண்டும் மெயின் பைப்லைன் அமைப்பதாக கூறி குழி தோண்டுகின்றனர். வீடுகளுக்கு செல்லும் இணைப்பை துண்டித்தால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
தற்ேபாது பைப்லைன் உடைந்தால், உடனடியாக அவர்களே சரிசெய்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க கோரினோம். இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகள் யாரும் வரமுடியாது என கூறிவிட்டனர். இதனை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,\” என்றனர். தகவலறிந்து வந்த டவுன் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

Tags : JCB ,
× RELATED நெல்லையில் ரூ.2 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு..!!