மன்னார்குடி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

மன்னார்குடி, ஏப். 4: தமிழக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொது தேர்தல் பார்வையாளர் சந்திர மோகன் பிரசாத் காஷ்யப் மன்னார்குடி தேர்தல் நடத் தும் அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொணடார்.மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி தொகுதிகளில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை கண்கானிக்க பொது தேர்தல் பார்வையாளராக சந்திர மோகன் பிரசாத் காஷ்யப் என்ற அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவர் மேற்கண்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் நடை பெற்று வரும் தேர்தல் பணிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கண்கானிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பொது தேர்தல் பார்வையாளர் சந்திர மோகன் பிரசாத் காஷ் யப் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலு வலகத் திற்கு நேரில் வந்து திடிரென ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், பின்லே அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, வாக்குச்சாவடி மையங்களில் தடையற்ற மின்வசதி, குடிநீர் வசதி, மாற்று திறனாளிகளுக்கு என சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வச திகள் குறித்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி யிடம் கேட்டறிந்தார். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறு டிஎஸ்பி இளஞ்செழியனிடம் அறிவுறுத்தி னார்.ஆய்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெய்வநாயகி, தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் இளங்கோவன், தொடர்பு அதிகாரி இன்னாசி ராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>