கும்பகோணம், திருவாரூரிலிருந்து நீடாமங்கலத்திற்கு அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்க வேண்டும்

நீடாமங்கலம்,ஏப்.4: கும்பகோணம்,திருவாரூரிலிருந்து நீடாமங்கலத்திற்கு அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலத்திற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு டவுன் பஸ் வந்தது. இந்த பஸ்சில் பள்ளி கல்லூரி மாணவர்கள்,வணிகர்கள்,சிறு வியாபாரிகள் கும்பகோணம் சென்று வந்தனர். அதே போன்று திருவாரூரிலிருந்து ஒரு அரசு டவுன் பஸ் வந்தது.இந்த பஸ்சிலும் பள்ளி கல்லூரி மாணவர்கள்,வணிகர்கள்,வியாபாரிகள்,பொதுமக்கள் எளிதாக சென்று வந்தனர்.

கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் வந்த அரசு டவுன் பஸ்சும்.நிருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வந்த டவுன் பஸ்சும் நிறுத்தபட்டு பல ஆண்டுகள் ஆகிறது.இதனால் நீடாமங்கலத்திலிருந்து கும்பகோணம்,திருவாரூர் சென்ற பள்ளி,கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.எனவே கும்பகோணத்திலிருந்தும்,திருவாரூரிலிருந்தும் அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>