தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் விழிப்புணர்வு முகாம்

முத்துப்பேட்டை, ஏப்.4: முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சுகாதார துறை இணைந்து தன்னார்வலர்கள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் நிர்மலாதேவி பேசுகையில்,சட்டமன்ற தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது, இளம் வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய கடமை தவறாது 100 சதவீதம் வாக்களிப்பது, வீட்டில் உள்ள அனைவரையும் வாக்களிக்க செய்வது, 12டி படிவத்தினை பயன்படுத்தி முதியவர;கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்த படியே வாக்களிக்க செய்வது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி பேசினார்.

அதனை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன்,முத்துப்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை, சானிடைசர், வழங்குவது மற்றும் மாஸ்க் அணிந்திருந்திருப்பதனை உறுதி செய்யவேண்டும் என்றார். தொடர்ந்து அங்கு பணியில் எப்படி ஈடுபடுவது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை வட்டார வளமைய மேலாளர் ராதிகா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

More