அமைச்சர் காமராஜ் தகவல் மன்னார்குடி அருகே ரூ 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் பதுக்கிய வாலிபர் கைது

மன்னார்குடி, ஏப். 4: தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 6ம்தேதி வாக்குப்பதிவு மற்றும் மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இதையடுத்து, டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபான கூடங் கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை 4ம் தேதி( இன்று) காலை 10 மணி முதல் வரும் 6ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மற்றும் மே மாதம் 2ம் தேதி முழுவதும் மூடப்படும். மதுபானங்கள் விற்பனை செய்வது நிறுத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலையாமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோழபாண்டி அடுத்த கடுக்காக்காடு அரசு மதுபான கடை பின்புறம் உள்ள தோப்பு ஒன்றில் மதுபாட்டில்கள் பதுக்கப்பட்டுள்ளதாக மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியனு க்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ பாண்டியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். அதில் தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ1 லட்சம் மதிப்பிலான 864 மதுபாட் டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.மேலும், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (29) என்பவரை தலையாமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து பிடிபட்ட நபரிடம் டிஎஸ்பி இளஞ்செழியன் விசாரணை நடத்தினார். பின்னர், வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசைத்தம்பி கைது செய்யப்பட்டார்.

Related Stories:

>