தஞ்சை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி வீதிவீதியாக ஓட்டு வேட்டை

தஞ்சை, ஏப்.4: தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தஞ்சை மாநகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நேற்று அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தஞ்சை மாநகரில் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். மேலும் மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது,நான் வெற்றி பெற்றால் தஞ்சைக்கு குடிநீர், சாலை வசதிக்கு முன்னுரிமை கொடுப்பேன். மேலஅலங்கம், வடக்கு அலங்கத்தில் ஸ்மார்ட்சிட்டி பணிக்காக வீடுகள் இடிக்கப்படாது. மாறாக இருக்கிற வீடுகள் அனைத்தும் அழகுப்படுத்தி நவீனப்படுத்தப்படும்.தஞ்சை நகருக்கு வெளியே 7 ஏக்கர் நிலத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படும். பாதாள சாக்கடை பணிகளை முறைப்படுத்தி பிரசனைகள் ஏற்படாத வகையில் நவீனப்படுத்தப்படும். எனவே எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.பிரசாரத்தில் அதிமுக பிரமுகர்கள், சரவணன், மணிகண்டன், சாவித்திரி கோபால், ரமேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Related Stories:

>