×

கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

கும்பகோணம், ஏப்.4: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட உள்ளூர், பழவாத்தான்கட்டளை, சாக்கோட்டை, அண்ணலக்ரஹாரம், கொருக்கை, தாராசுரம், பாபுராஜபுரம், பெரும்பாண்டி, கொரநாட்டுக்கருப்பூர் ஆகிய பகுதிகளிலும், கும்பகோணம் நகராட்சி சர்ச் ரோடு, நாகேஸ்வரன் வடக்கு வீதி, காமராஜ் ரோடு, இந்திரா காந்தி சாலை, பெரிய கடைத் தெரு, யானையடி, உச்சிபிள்ளையார் கோவில் தெரு, காந்தியடிகள் சாலை உள்ளிட்ட நகர முக்கிய வீதிகளிலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பொதுமக்கள் வேட்பாளரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வாக்கு சேகரிப்பின்போது, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன், குடந்தை மாவட்ட திக.தலைவர் நிம்மதி, மதிமுக மாவட்ட செயலாளர் முருகன், விசிக மாவட்ட செயலாளர் உறவழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Kumbakonam ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...