வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

புதுக்கோட்டை, ஏப். 4: புதுக்கோட்டை மாவட்டம் ஆரியூர் குமரன் பல்தொழில்நுட்ப கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடந்து வரும் இரண்டாம் கட்ட மறு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலுமான உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரி கூறியதாவது:தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 9,128 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே கடந்த 18ம் தேதி முதற்கட்ட பயிற்சி, 26ம் தேதி இரண்டாம்கட்ட பயிற்சி நடந்தது. இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்துவது பார்வையிடப்பட்டது என்றார்.ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>