அனைத்து நிறுவனங்களுக்கு தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல் ஆ.ராசா எம்பி முன்னிலையில் அதிமுகவினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

பெரம்பலூர்,ஏப்.4: சிறுவாச்சூர் அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் திமுக துணை ப் பொதுச் செயலாளர் ஆ.ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் அதிமுகவினர் அமுதா என்பவர் தலைமையில், 50க்கும் மேற்பட் டோர் அக்கட்சியிலிருந்து விலகிவந்து, நேற்று பெரம்பலூர் பாலக்கரை அருகேயுள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி முன்னிலையில், திமுக கட் சியில் தங்களை இணைத் துக் கொண்டனர்.நிகழ்ச்சியின்போது தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், பெரம்ப லூர் ஒன்றியச் செயலாளர் வடக்குமாதவி அண்ணாதுரை, தொமுச கிளைத்தலை வர் கோனேரிப்பாளையம் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>