சீர்காழி அதிமுக வேட்பாளர் பாரதி உட்பட 2 பேர் மீது வழக்கு

கொள்ளிடம், ஏப். 4: சீர்காழி அதிமுக வேட்பாளர் பாரதி, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் நற்குணம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் சீர்காழி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவிதா அறிவழகன் நேற்று வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அதிமுக வேட்பாளர் பாரதி, கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலாளர் நற்குணம் மற்றும் அதிமுகவினர் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குகள் சேகரிக்க கூடாது என்று தாக்கினர். இதுகுறித்து புதுபட்டினம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவிதா அறிவழகன் புகார் செய்தார். அதன்பேரில் அதிமுக வேட்பாளர் பாரதி, ஒன்றிய செயலாளர் நற்குணன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மிரட்டி வரும் அதிமுக வேட்பாளரை கைது செய்யக்கோரி சீர்காழி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>