மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக காப்பீட்டு திட்டம் சாத்தூர் அமமுக வேட்பாளர் வாக்குறுதி

சாத்தூர்,ஏப்..3: சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் அமமுக வேட்பாளர் ராஜவர்மன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகள் விண்ணப்பித்த அறுபது நாட்களுக்குள் விவசாய பம்ப் செட்டுக்கு இலவசமின் இணைப்பு வழங்கப்படும். பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் தனியார் துறையைத் தவிர்த்துவிட்டு, பொதுத் துறை நிறுவனமான தேசிய வேளாண் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் வாயிலாகவே அவற்றைச் செயல்படுத்தவும்,அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை மருத்துவப் பரிசோதனை, அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கான உளவியல் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இடைத்தரகர்களுக்கு இடமளிக்காத வகையில் நூலகங்களுக்கு நூல்கள் வாங்குதல், ஆழ்குழாய் மீட்புக் கருவிகள் அனைத்து தீயணைப்பு நிலையத்திலும் அமைத்திட, சுங்கச் சாவடிக் கட்டணங்களை குறைத்திட, பாஸ்டிராக் முறையை மாற்ற, பெண்களுக்கான கிராமப்புற வங்கி, மூத்த குடிமக்களுக்குப் பஸ் கட்டணச்சலுகை, அரசு முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேகக் காப்பீட்டுத் திட்டங்கள் நிறைவேற்ற எனக்கு வாக்களியுங்கள் என்று அவர் பேசினார்.அவருடன் அமமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், தேமுதிக நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>