×

ஏகேடிஆர் சந்தை வியாபாரிகளிடம் திமுக வேட்பாளர் வாக்குவேட்டை

ராஜபாளையம், ஏப். 3: ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் எம்எல்ஏ ஏகேடிஆர் சந்தையில் நேற்று வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு வியாபாரிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது வியாபாரிகள் கூறுகையில், கொரோனா பரவிய காலங்களில் மருத்துவமனைகளில் அவதிப்பட்டு வந்த நோயாளிகளுக்கும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தினசரி பணி இல்லாமல் இருந்த பலருக்கும் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தான் உணவு வழங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் பெற்ற மாத ஊதியத்தை மாதம்தோறும் ஏழை எளியவர்களுக்கு வழங்கி வந்ததுடன், எதிர்க்கட்சியாக இருந்த போதும் இப்பகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய சேவை தொடர்ந்து தேவை. எனவே, அவருக்கு தான் வாக்களிப்போம் என்று உறுதிபட தெரிவித்தனர். பிரசாரத்தில் திமுக நகர பொறுப்பாளர் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி