பாஜவிற்கு ஓட்டு போட்டால் விருதுநகர் வணிகம் அதானி, அம்பானிக்கு போய் விடும் மாணிக்கம்தாகூர் எம்.பி பேச்சு

விருதுநகர், ஏப்.3: விருதுநகர் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம்தாகூர் மெயின்பஜாரில் வணிகர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் எம்ஜிஆர் சிலை அருகில் பேசியதாவது: விருதுநகரில் வளர்ச்சியா, விருதுநகரில் வன்முறையா என்பதை நிர்ணயம் செய்கிற தேர்தல் இது. கோவையில் உ.பி முதல்வர் ஆதித்யநாத் வந்த போது கடைகளை மூட வலியுறுத்தி கடைகளை அடித்து நொறுக்கினர். வியாபாரம் நடக்கும் விருதுநகரை வன்முறையாளர்கள் உள்ள பாஜவிடம் கொடுக்கலாமா?விருதுநகரில் இதுவரை மதக்கலவரம்,சாதிக்கலவரம் நடந்ததில்லை. பாஜ வெற்றி பெற்றால் யாரும் அமைதியாக தொழில் செய்ய, வியாபாரம் செய்ய முடியாது. விருதுநகர் வணிகம் அதானி, அம்பானிகளுக்கு போய்விடும். பாஜ வந்தால் விருதுநகர் வணிர்கள் வியாபாரத்தை விட்டு விட்டு அதானி, அம்பானியிடம் தான் வேலை செய்ய வேண்டும்.எம்ஜிஆர், ஜெயலலிதா போன பிறகு அதிமுக அல்ல, அமித்ஷா அதிமுக.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் தன்மானத்திற்கு போராடக் கூடியவர்.7 தொகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக கூட்டணி வெற்றி பெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More