தொகுதி மக்களைப் பற்றி சிந்திக்காதவர் ஓபிஎஸ் மீது அமமுக வேட்பாளர் தாக்கு

போடி, ஏப் 3: போடி தொகுதி அமமுக வேட்பாளர் முத்துச்சாமி, போடி வள்ளுவர் சிலை திடலில் நேற்று பேசியதாவது: தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா நின்றால், வாக்காளர்களுக்கு ஆயிரம் நினைவுகள் வரும். ஆனால், ஓபிஎஸ் கடந்த 10 ஆண்டாக எம்.எல்.ஏவாக இருந்தவர், நிதியமைச்சர், முதல்வர், துணைமுதல்வர் என பல்வேறு பதவிகளை வகித்தாலும், அவரிடம் பெருமையாக சொல்லும்படி ஒன்றும் இல்லை. ரூ.130 கோடியில் முல்லை பெரியாற்றிலிருந்து குடிநீர் திட்டம் என்கிறார். அதையே கொட்டகுடி ஆற்றில் இருமலைகள் அடிவாரத்தில் அணை கட்டியிருக்கலாம். இதனால், குடிநீர் தேவை பூர்த்தியாகி இருக்கும். நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்படும். ஆனால், வருமானம் மற்றும் கமிஷனைப் பற்றி சிந்திப்பதால், போடி தொகுதி மக்களை பற்றி சிந்திக்க ஓபிஎஸ்சுக்கு நேரம் இல்லை. கொள்ளை அடித்த பணத்தை பதுக்கி வைக்க தீவை விலைக்கு வாங்கி மகனை அனுப்பி வைக்கிறார். தேர்தல் வந்தவுடன் ஒட்டுக்கு 2 ஆயித்தை வீசினால், தனக்கு ஓட்டு போட்டு மக்கள் ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என நினைக்கிறார். போடி தொகுதி மக்களை ஏமாளிகள் என்று லிஸ்ட்டில் வைத்துள்ளனர். எனவே, வாக்காள பெருமக்கள் அனைவரும் ஓபிஎஸ்சிற்கு எதிராக வாக்களித்து, இந்த தேர்தலோடு வீட்டிற்கு அனுப்புங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>