திமுக கூட்டணி பொது கூட்டம்

சிவகங்கை, ஏப். 3:  சிவகங்கை அரண்மனைவாசல் முன் திமுக கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது. இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை வகித்தார். திமுக நகர் செயலாளர் துரைஆனந்த் முன்னிலை வகித்தார். இ.கம்யூனிஸ்ட் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா சிறப்புரையாற்றினார். இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், மதிமுக மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் சோனை, வீரபத்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இ.கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்

Related Stories:

>