×

11 அடையாள அட்டையில் ஏப்.6 வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்

சிவகங்கை, ஏப். 3: சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கை: ஏப்.6 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போகக்குவரத்து நிறுவனங்கள், பீடி- சுருட்டு நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வேலையளிப்பவர்கள் வழங்க வேண்டும்.

மேலும், கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புச்சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், அன்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் (அமலாக்கம்) புகார் தெரிவிக்கலாம். தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம் தொலைபேசி எண் 04575-240521 மற்றும் 9442418361, 9865893585, 9025602961 ஆகிய செல் எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு