×

கமுதியில் பங்குனி திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து பரவசம்

கமுதி, ஏப். 3: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து பரவசமடைந்தனர். கமுதியில் உள்ளது முத்துமாரியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மார்ச் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மார்ச் 30ம் தேதி பொங்கல் திருவிழாவும், 31ம் தேதி அக்னிச்சட்டி திருவிழாவும் நடைபெற்றது. நேற்று பூக்குழி பக்தர்கள் சார்பில் நந்தவனத்தில் இருந்து விரதம் இருந்த பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக, மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாலையில் 2007 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முளைப்பாரி திருவிழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின் முறையார்கள் செய்து வருகின்றனர்.

Tags : Panguni festival ,Kamuthi ,
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா