×

பரமக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி உறுதி முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரசாரம்

பரமக்குடி, ஏப். 3:  பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முருகேசனை ஆதரித்து நேற்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்த்திபனூர், விளத்தூர், கஞ்சியனேந்தல், நயினார் கோவில் காரடர்ந்தகுடி ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் மத்தியில் ராஜகண்ணப்பன் பேசியதாவது: பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் முருகேசன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். உழைப்பால் உயர்ந்தவர். முருகேசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அதேபோல் முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளிலும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இதுதான் அதிமுக ஆட்சி. திமுக சுயமரியாதையை காப்பாற்றும் கட்சி. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றப்படும்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை சோப்பு டப்பா. இந்த ஆட்சியை மாற்ற உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார். முன்னதாக கஞ்சியனேந்தல் தர்மன், ராஜ கண்ணப்பனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தினார்.
தொடர்ந்து மேலாய்குடியை சேர்ந்த 41 பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். பிரசாரத்தில் தொகுதி பொறுப்பாளர் திசைவீரன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், மாநில தீர்மானக்குழு துணை தலைவர் திவாகர், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத், பரமக்குடி ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், சந்திரசேகர், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் சக்தி, அண்ணாமலை, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Murugesan ,Paramakudi constituency ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...