திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறன் டி.கல்லுப்பட்டியில் பிரசாரம்

பேரையூர், ஏப்.3: திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து நேற்று டி.கல்லுப்பட்டி பேருந்துநிலையம் அருகில் ஆதரித்து பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்பி கம்பம் செல்வேந்திரன், மாநில திமுக தேர்தல்பணி ஒருங்கிணைப்பாளர் சேடபட்டிமுத்தையா, முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம், லதாஅதியமான் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கம்பம் செல்வேந்திரன் பேசுகையில், ‘‘அதிமுக அமைச்சரவையில் இரவு மட்டுமல்ல பகல் முழுவதும் விளக்குப்பிடிச்சு தேடினாலும் ஒரு யோக்கியரையும் காண முடியாது. இப்பகுதியின் மண்ணின் மைந்தன் உங்கள் வீட்டருகிலேயே உள்ள வேட்பாளர் மணிமாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார்.சேடபட்டி முத்தையா பேசுகையில், ‘‘பொதுமக்களுக்கு சேவை செய்து வளர்ந்ததுதான் திமுக கட்சி. எனக்கு மட்டும் மணிமாறன் மகனில்லை. உங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் மகனாக சேவை செய்பவர். எனவே ஸ்டாலின் தலைமையிலான தமிழக திமுக ஆட்சி அமைய மணிமாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார். இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கல்விக் கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் மதுரை, ஏப்.3: மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் லியோனி நேற்று தெப்பக்குளம், கீழ்மதுரை, டீச்சர்ஸ் காலனி, பங்கஜம்காலனி, முனிச்சாலை, பாலரெங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘மத்திய அரசின் அடிமைகள் ஆட்சியான அதிமுக அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் பெருக அதிமுக அரசு காரணம். மாணவர்களின் கல்வித்தரம் அனைத்தையும் அதல பாதாளத்துக்கு அதிமுக அரசு கொண்டு சென்றுவிட்டது. பாஜ அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்பட்டது. தமிழகத்தில் விடிவுகாலம் பிறக்கவும், மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வதாகவும் திமுக தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். ’’ என தெரிவித்தார்.பிரச்சாரத்தில் மதிமுக மாவட்ட துணை செயலாளர் சுருதி ரமேஷ், தெற்கு சட்டமன்ற திமுக தேர்தல் பொறுப்பாளர் மதிச்சியம் வேல்முருகன், திமுக பகுதி செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் சென்றனர்.

Related Stories:

>