பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ வாக்குறுதி

ஒட்டன்சத்திரம், ஏப். 3: ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ, தொகுதிக்குட்பட்ட இடையகோட்டை, கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூர், சாமியாடி புதூர், டேம் காலணி, அய்யம்பாளையம், இடையகோட்டை பள்ளிவாசல் தெரு, இஸ்லாமியர் மேற்கு தெரு, ஆதி காலனி தெற்கு ஆகிய பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் ரூ.40 கோடியில் நங்காஞ்சியாறு அணைத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இடையகோட்டை நங்காஞ்சியாறு ஆணையிலிருந்து ரூ.5 கோடியில் 9 ஊராட்சிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. கேதையுறும்பு, இடையகோட்டை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்கள், மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இடையகோடடையில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விடுதி, காவலர் குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் மூலம் தொகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். நங்காஞ்சியாறு, குடகனாறு, அமராவதி, பச்சையாறு, குதிரையாறு, வரதமாநதி, நல்லதங்கள் ஆகிய ஆறுகள் இணைக்கப்பட்டு ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தலையூத்து மற்றும் நங்காஞ்சியாறு பகுதியை சுற்றுலாத் தலமாக்கப்படும் உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>