அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிக்கை

திண்டுக்கல், ஏப். 3: தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு உலகத்தரத்திற்கு ஈடான கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 2008-2009ல் அப்போதைய முதல்வர் கலைஞர், 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிணி அறிவியலை தனி பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2011ல் சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், இதையடுத்து வந்த அதிமுக அரசு, ஏழை மாணவர்கள் கணினி அறிவியல் கல்வியையும், பாடப்புத்தகங்களையும் வழங்காமல் பத்தாண்டுகள் கிடப்பில் போட்டுள்ளது. எனவே, அதிமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக ஆட்சியில் கலைஞர் தந்த கணினி பாடத்தை மீண்டும் அரசு பள்ளியில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>