ராணுவக்கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 15ம் தேதி கடைசி

தஞ்சை, ஏப்.3: ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி டேராடூனில் வரும் ஜனவரி பருவத்தில் சேர்வதற்கான தேர்வு வரும் ஜூன் 5ம் தேதி நடைபெற உள்ளது. அதன் விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு என்ற www.rimc.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் ஏப்.15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1.1.2022ம் தேதியன்று பதினொன்றை வயது முதல் 13 வயதை அடையாதவர்கள் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது 7ம் வகுப்பு பயில்பவராக இருக்கும் அனைத்து முன்னாள் படைவீரர் சிறார்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும் விருப்பமுள்ளவர்கள் பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>