திருச்சி மாநகர கமிஷனர், ஐஜி பொறுப்பேற்பு

திருச்சி, ஏப். 3: திருச்சி மாநகரக போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட அருண், மத்திய மண்டல ஐஜியாக தீபக் எம்.தாமோர் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். திருச்சியில் காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளவில்லை என திருச்சி கமிஷனர் லோகநாதன், அதுபோல் டெல்டாவில் பணப்பட்டுவாடாவில் அதிமுகவினருக்கு சாதகமாக நடந்து கொள்வதாக மத்திய மண்டல ஐஜி ஜெயராம் ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அதையடுத்து திருச்சி மாநகர கமிஷனராக அருண் மற்றும் மத்திய மண்டல ஐஜியாக தீபக் எம்.தாமோர் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டது. மாநகர கமிஷனர் அருண் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தேர்தல் அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதுபோல், மத்திய மண்டல ஐஜியாக தீபக் எம் தாமோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Stories:

>