வளர்ச்சி திட்டப்பணிகளை எடுத்துக்கூறி குற்றாலம், மேலகரம் பேரூராட்சிகளில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் பிரசாரம்

தென்காசி, ஏப்.3: தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் நேற்று தென்காசி ஒன்றிய பகுதிகளான காசிமேஜர்புரம், குற்றாலம் மற்றும் மேலகரம் பேரூராட்சி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். குற்றாலத்தில் பேரூர் செயலாளர் கணேஷ் தாமோதரன் தலைமையில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மேலகரம் பேரூராட்சியில் குடியிருப்பு, நன்னகரம், மின்நகர், எழில் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, என்ஜிஓ காலனி, பாரதிநகர்,தெப்பக்குளம், அக்ரகாரம்,  மேலகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பேரூர் செயலாளர் வக்கீல் கார்த்திக்குமார் தலைமையில் வாக்கு சேகரித்தார். அவர் பேசுகையில், மேலகரம் பேரூராட்சி நூலகத்திற்கு ரூ.10 லட்சத்தில் மாடி கட்டிடம், இலஞ்சி பேரூராட்சியில் ரூ.9 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம், குற்றாலம் வேலம்மாள்நகரில் ரூ.6 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இலஞ்சி 15வது வார்டில் ரூ.20 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, இலஞ்சி சிற்றாற்று வீரியம்மன்கோவில் அருகில் ரூ.8 லட்சத்தில் கலையரங்கம், காசிமேஜர்புரம் ஊராட்சி பொதுமயானத்தில் ரூ.5 லட்சத்தில் தகனமேடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்திட மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டுகிறேன் என்றார்.

பிரசாரத்தில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சாமிநாதன், இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், செயலாளர்கள் சங்கரபாண்டியன் அமுல்ராஜ் பாண்டியன், இருளப்பன், அரசு வழக்கறிஞர் சின்னத்துரை, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் காத்தவராயன், பாசறை செயலாளர் சிவசீத்தாராமன், மாணவரணி சேர்மபாண்டி, பாஜ தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் முருகன், பொறுப்பாளர் செந்தூர்பாண்டியன், திருமுருகன், மாடசாமி, மகேஸ்வரன், ஜிம்ஜெயசங்கர், பிலவேந்திரன், அலெக்ஸ், சிவக்குமார், சுடலை, மேலகரம் வார்டு செயலாளர்கள் வெங்கடேஷ், சுப்பிரமணியன், பழனி, செந்தில், முருகையா, முப்புடாதி, முருகன், பாலகிருஷ்ணன், முருகசாமி, சேகர், குற்றாலம் சுரேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>