×

கயத்தாறில் பாய் கொள்முதல் நிலையம்

கயத்தாறு, ஏப்.3: கயத்தாறில் பாய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என உறுதியளித்த  அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கயத்தாறு முகம்மது நயினார் பள்ளிவாசலில் நேற்று மதியம் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.மேலும் அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்களிடம் கூறியதாவது, ‘கயத்தாறு மற்றும் அய்யனாரூத்து, மானங்காத்தான் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக பாய் தொழில் அமைந்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கயத்தாறில் பாய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். மேலும் பாய் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

 வாக்கு சேகரிப்பின் போது அவருடன் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வினோபாஜி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் செல்வக்குமார்,  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், பாமக மாநில துணை பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், வேளாண்மை விற்பனை குழு இயக்குனர் பேட்டை மாரியப்பன், பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், மாவட்ட தலைவர் மாடசாமி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், தமாகா கோவில்பட்டி நகர செயலாளர் ராஜகோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, கயத்தாறு அதிமுக மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீத கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.  தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி பாரதிநகர் 3வது மேட்டு தெரு, மந்தித்தோப்பு ரோடு, மகாலட்சுமி தீப்பெட்டி ஆபீஸ் அருகில், தேவர் சிலை முன்பு, தங்கமுத்து மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் சமூக நலக்கூடம், பிள்ளையார் கோவில் மேட்டுத்தெரு, இலுப்பையூரணி சலவையர் காலனி, விஸ்வநாத காலனி, லிங்கம்பட்டி சமத்துவபுரம், சென்னையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

Tags : Station ,Kayathar ,
× RELATED வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில்...