×

மாவட்டத்தில் 6 வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டுசெல்லும் 138 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி

நாமக்கல், ஏப். 3: நாமக்கல் மாவட்டத்தில் மாவட்டத்தில் 6 வாக்குசாவடிகளுக்கு  வாக்குபதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லும் 138 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுயில், 2,049 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான வேட்பாளர்கள் களத்தில் உள்ள தொகுதிகளுக்கு , வாக்குபதிவிற்காக, கூடுதல் இயந்திரங்கள் உள்பட, 4,148 வாக்குபதிவு இயந்திரம், 2,572 கட்டுப்பாட்டு கருவி, 2,786 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. வாக்குபதிவு இயந்திரங்களை, வாக்குச்சாவடிகளுக்கு  கொண்டுசெல்ல, ராசிபுரம் தொகுதிக்கு, 22 வாகனங்கள், சேந்தமங்கலம் 26, நாமக்கல், 25, பரமத்திவேலூருக்கு 20, திருச்செங்கோடு, 23, குமாரபாளையத்துக்கு 22 என, மொத்தம், 138 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று, இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது. நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அந்த  வாகனங்களுக்கு நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில், வருவாய் துறையினர், ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தினார்கள். இதனால் வாகனங்கள் பாதுகாக்கப்படும். மேலும் இடைப்பாடி பகுதியில் வாகனங்கள் செல்வது தடைப்பட்டால் உடனியாக நடவடிக்கை எடுக்க இயலும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்