நெடுங்குளம் ஊராட்சியில் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக பெண் விவசாயிகளிடம் பிரசாரம்

இடைப்பாடி, ஏப்.3: இடைப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கோனேரிப்பட்டி, கொட்டாயூர், தம்பாகவுண்டனூர், காட்டூர்புதூர், சிலுவம்பாளையம் பகுதியில், முதல்வரின் அண்ணன் கோவிந்தராஜ் தலைமையில்  எடப்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் துரை, இடைப்பாடி ஜெ.பேரவை ஒன்றிய துணைத் தலைவர் ரவி ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வயல் வெளிகளில் களை எடுக்கும் பெண்கள் மற்றும் தோட்ட விவசாய தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடைப்பாடி தொகுதிக்கு எண்ணற்ற வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். மேலும் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர, கடைகள் மற்றும் வீடுகளில் உள்ளவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்குவது குறித்தும், வாஷிங் மெஷின், முதியோர் உதவித்தொகை ₹2000ஆக உயர்த்தியது குறித்தும் கூறி வாக்கு சேகரித்தனர். அப்போது, நவீன், செயலாளர் சந்தோஷ், வக்கீல் ராஜசேகர், தேவராஜ், ராஜேந்திரன், சக்திவேல், துரைசாமி, தங்கவேலு, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

>